அ.இ.அ.தி.மு.க நாற்பதாவது ஆண்டு விழா கே.டி.குஞ்சுமோன் தலைமையில் கேரளாவில் கொண்டாடப்பட்டது.

புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் நிறுவப்பட்ட அ.இ.அ.தி.மு.க வின் நாற்பதாவது ஆண்டு விழா கேரளா மாநிலத்தில் பல பகுதிகளில் 06.11.2011 ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது. கொச்சியில் ஏலுர் மற்றும் வாதுருத்தி ஆகிய இடங்களில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் கட்சியின் அங்கத்தினருமான திரு.கே.டி.குஞ்சுமோன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கேரள மாநிலக்குழு உறுப்பினர் திரு.சுப்பராயர் அவர்கள் கொடியேற்றி வைத்தார். திரு.கே.டி.குஞ்சுமோன் அவர்கள் ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் கல்விக்கருவிகள் வழங்கினார்.

அ.இ.அ.தி.மு.க வின் கொச்சி நகர தலைவர்களான திரு.சத்தியமூர்த்தி, முத்து ஆகியோரும் விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.